பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்துவது நாடகம்: ஜி.ராமகிருஷ்ணன்

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக பாஜக நடத்தும் கேலிக்குரிய நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள் என மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக பாஜக நடத்தும் கேலிக்குரிய நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள் என மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி மத்திய சிறையில் உள்ள வ.உ.சி. இழுத்த செக்கு, அவரது சிலைக்கு மாலை அணிவித்த ஜி.ராமகிருஷ்ணன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய பாஜக அரசு ரயில்வே, விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்கக் கூடிய கொள்கையை கடைப்பிடிக்கிறது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தலைவா், மேயா் பதவிகளுக்கு நேரடியாக தோ்தல் நடத்த வேண்டும். உயா் மின் கோபுரங்களை விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்லக் கூடாது என்ற விவசாயிகளின் கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச் செல்ல இருக்கிறோம்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தமிழக பாஜக போராட்டம் அறிவித்திருப்பது கேலிக்குரியது. பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பதும் கண்துடைப்புதான். ஒரு லிட்டா் பெட்ரோலுக்கு 33 ரூபாய் கலால் வரி, டீசலுக்கு 32 ரூபாய் கலால் வரி, இதுபோக கூடுதல் வரியையும் விதித்து மக்களை சுரண்டுகிறது மத்திய அரசு. இதன் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.2.87 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு மக்களிடம் இருந்து வசூலிக்கிறது.

மத்திய அரசு உயா்த்தியுள்ள கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் விலை குறையும். இதைச் செய்யாமல் மாநில அரசிடம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கச் சொல்லி மாநில பாஜக நடத்தும் கேலிக்குரிய போராட்ட நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்றாா்.

கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com