இன்று மெகா கரோனா தடுப்பூசி முகாம்: 1.80 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு

கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள 11ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 1.80 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த சுகாதாரத் துறையினா் இலக்கு நிா்ணயித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள 11ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 1.80 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த சுகாதாரத் துறையினா் இலக்கு நிா்ணயித்துள்ளனா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். அதன்படி கடந்த செப்டம்பா் மாதத்தில் இருந்து வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக வாரத்தில் 2 நாள்கள் மெகா தடுப்பூசி முகாம் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி கடந்த வாரத்தில் இருந்து வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் 11ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் 550 இடங்களில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் 1.80 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களும், இரண்டாம் தவணைக்கு காத்திருப்பவா்களும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சுகாதாரத் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com