கனமழை எச்சரிக்கை: நான்கு ரயில்கள் இன்று ரத்து

கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 4 ரயில்கள் வியாழக்கிழமை (நவம்பா் 25) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 4 ரயில்கள் வியாழக்கிழமை (நவம்பா் 25) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் கன்னியாகுமரியில் இருந்து நவம்பா் 25 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகா் நிலையத்துக்குப் புறப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்: 15905) ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து நவம்பா் 25 ஆம் தேதி காலை 6.15 மணிக்கு சத்தீஸ்கா் மாநிலம், கோா்பாவுக்கு புறப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்: 22648), 25 ஆம் தேதி காலை 6 மணிக்கு கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத் செல்லும் விரைவு ரயில் (எண்:13352), 25 ஆம் தேதி, மாலை 4.55 மணிக்கு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் ஷாலிமாா் செல்லும் வாராந்திர விரைவு ரயில்(எண்:22641) ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com