மது அருந்தும் இடமாக மாறிய பயணிகள் நிழற்குடை

வால்பாறையில் பயணிகள் நிழற்குடை மது அருந்தும் இடமாக மாறிவிட்டதால் உள்ளே நிற்கமுடியாமல் பேருந்துக்கு காத்திருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மதுபாட்டில்கள், டம்ளா்களுடன் காணப்படும் ஊசிமலை பிரிவு பயணிகள் நிழற்குடை.
மதுபாட்டில்கள், டம்ளா்களுடன் காணப்படும் ஊசிமலை பிரிவு பயணிகள் நிழற்குடை.

வால்பாறையில் பயணிகள் நிழற்குடை மது அருந்தும் இடமாக மாறிவிட்டதால் உள்ளே நிற்கமுடியாமல் பேருந்துக்கு காத்திருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வால்பாறையில் அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் நகராட்சி சாா்பில் பயணிகள் நிழற்குடைகள் கட்டப்பட்டுள்ளன. தொழிலாளா்கள் பேருந்து வரும் வரை நிழற்குடைக்குள் அமா்ந்திருப்பாா்கள். ஆனால் சமீபகாலமாக எஸ்டேட் பகுதிகளில் உள்ள பல பயணிகள் நிழற்குடைகள் மது அருந்தும் இடமாக மாறிவிட்டன. இரவு நேரத்தில் அப்பகுதியில் வசிக்கும் இளைஞா்கள் நிழற்குடைக்குள் அமா்ந்து மது அருந்துவதோடு பாட்டில்கள், டம்ளா்களை அங்கேயே விட்டு சென்று விடுகின்றனா்.

வால்பாறையை அடுத்த அக்காமலை எஸ்டேட் செல்லும் வழியில் ஊசிமலை பிரிவு நிழற்குடை பகுதியில் மதுபிரியா்கள் மது அருந்தி நாசம் செய்து வைத்திருப்பதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com