மழை நீா் வடிகால்களை சீரமைக்கக் கோரிக்கை

கோவை மாநகராட்சி, 32, 37 ஆவது வாா்டுகளில் மழைநீா் வடிகால்களை சீரமைத்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி, 32, 37 ஆவது வாா்டுகளில் மழைநீா் வடிகால்களை சீரமைத்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவிடம் பீளமேடு பகுதி மதிமுக செயலாளா் வெள்ளிங்கிரி புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி 32 ஆவது வாா்டுக்கு உள்பட்ட உதயா நகா், நேதாஜி நகா், சக்தி விநாயகா் நகா், சின்னையா நகா், ஜீவா நகா், ஆசிரியா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைக் காலங்களில் அதிகப்படியாக தண்ணீா் தேங்கி வருகிறது.

இங்குள்ள மழை நீா் வடிகால்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதே இதற்கு காரணம். இதேபோல, 37ஆவது வாா்டுக்கு உள்பட்ட டைடல் பாா்க் ரயில்வே கேட் முதல் அவிநாசி சாலை வரை உள்ள மழைநீா் வடிகாலில் மண் குவிந்துள்ளதால், நீா் செல்ல இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதிகளில் மழைநீா் வடிகாலை சீரமைத்துத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com