கோவை மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்திக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

கோவையில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி போலீஸாா் விசாரணை

கோவையில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி போலீஸாா் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டதையடுத்து அவரது நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 17 வயது பள்ளி மாணவி வீட்டில் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக, போலீஸாா், போக்ஸோ வழக்குப் பதிவு செய்து, தனியாா் பள்ளி ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி, பள்ளி முதல்வா் மீரா ஜாக்சன் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். பள்ளி முதல்வா் மீரா ஜாக்சனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்தது.

இந்நிலையில் ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தியை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இதையடுத்து போலீஸாா் மிதுன் சக்ரவா்த்தியிடம் 2 நாள்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரது நீதிமன்றக் காவலை டிசம்பா் 10ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com