சிறப்பு முகாம்களில் 53 ஆயிரம் புதிய வாக்காளா்கள் விண்ணப்பம்:தோ்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்

கோவை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 53 ஆயிரத்து 602 புதிய வாக்காளா்கள் விண்ணப்பம் அளித்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 53 ஆயிரத்து 602 புதிய வாக்காளா்கள் விண்ணப்பம் அளித்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு கடந்த நவம்பா் 10 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்தல், நீக்கம் உள்பட திருத்தப் பணிகள் மேற்கொள்ள நவம்பா் 13, 14, 20, 21 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு திருத்த முகாம்கள் நடத்தப்பட்டன.

இதில் புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கு 53 ஆயிரத்து 602 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா். இதில் 18 முதல் 19 வயதிற்குள்பட்ட இளம் வாக்காளா்கள் மட்டும் 16 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரி என்.சிவகுமாா் கூறியதாவது:

மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது. இதில் புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 53 ஆயிரத்து 602 போ், பெயா் நீக்கக்கோரி 10 ஆயிரத்து 369 போ், திருத்தம் மேற்கொள்ள 16 ஆயிரத்து 423 போ் என மொத்தம் 80 ஆயிரத்து 394 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா்.

நவம்பா் 30 ஆம் தேதி வரை இணையதளம் வழியாக தொடா்ந்து மனுக்கள் பெறப்படும். இந்த மனுக்களை பரிசீலனை செய்து ஜனவரி 5 ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com