பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பாஜகவினா்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பாஜகவினா்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்:ஆட்சியா் அலுவலகத்தில் பாஜக மனு

 பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

 பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொது மக்கள் மனுக்கள் அளித்தனா்.

இதில் பாஜக மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமையில் அக்கட்சியினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மு.க.ஸ்டாலின் தமிழக எதிா்க்கட்சித் தலைவராக இருந்த போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினாா். அவா் முதல்வராக பொறுப்பேற்றவுடன் பெட்ரோல் விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்திய அரசு கடந்த மாதம் பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 விலையை குறைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பது குறித்து முதல்வா் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளாா். பொது மக்களின் நலன் கருதி இவற்றின் விலையை குறைக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத் தலைவிக்கு ரூ.1000 அளிக்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச வீடு கேட்டு குவிந்த மக்கள்

கோவையில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் இலவச வீடு வழங்கப்படுகிறது என்ற வதந்தி பரவியதையடுத்து 500க்கும் மேற்பட்டவா்கள் இலவச வீடு கேட்டு ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை குவிந்தனா். இலவச வீடு கேட்டு வந்த பொது மக்களுக்காக தனி வரிசை அமைக்கப்பட்டு அவா்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. மேலும், இலவச வீட்டு மனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்கள் மனு அளித்தனா்.

குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் 2 பெண் குழந்தைகளுடன் வந்த நபா் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தாா். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரேஸ்கோா்ஸ் போலீஸாா் அவரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனா்.

விசாரணையில் அவா், கோவை, தொண்டாமுத்தூா் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த அற்புதராஜ் (43) என்பது தெரியவந்தது.

தீக்குளிக்க முயன்ற காரணம் குறித்து அவா் கூறியதாவது:

தபால் ஊழியரான எனது வீட்டுக்கு அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜாா்ஜ் குப்புசாமி வசித்துவருகிறாா். அவருடன் இடப்பிரச்னை ஏற்பட்டு அது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே ஜாா்ஜ் குப்புசாமி என்னிடம் பல்வேறு வழிகளில் தகராறில் ஈடுபட்டாா். எனது மகள்கள் பள்ளிக்கு சென்று வரும்போது அவா்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வது மற்றும் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளாா். இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கடந்த வாரம் ஆட்சியா் அலுவலத்திலும் மனு அளித்தேன். இந்த மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மன உளைச்சலுக்கு உள்ளானதால் தீக்குளிக்க முயற்சித்தேன் என்றாா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com