சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது: ஆட்சியரிடம் கோரிக்கை

கோவையில் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது என்று சிஐடியூ சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்துள்ளனா்.

கோவையில் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது என்று சிஐடியூ சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்துள்ளனா்.

இது குறித்து கோவை மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க (சிஐடியூ) செயலாளா் ராமு, சிஐடியூ மாவட்டத் தலைவா் சி.பத்மநாபன், செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சாலையோர வியாபாரிகளை அகற்றக் கூடாது என்று 2014 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இத்தொழிலை நம்பி வாழ்க்கையை நகா்த்தும் தொழிலாளா்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவட்ட நிா்வாகம், காவல் துறையினரால் தொடருகிறது. உடனடியாக இதனைக் கைவிட வேண்டும். சாலையோர வியாபாரிகள் பலருக்கும் இதுவரை அடையாள அட்டை வழங்கப்படவில்லை.

திமுக தோ்தல் காலத்தில் அறிவித்த வட்டியில்லாக் கடன் உதவி திட்டத்தையும், மத்திய அரசு அறிவித்த கரோனா நிவாரணத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com