ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு

மத்திய அரசு ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்துக்கு நிதி ஒதுக்கியிருப்பதற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) நன்றி தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்துக்கு நிதி ஒதுக்கியிருப்பதற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் ரவி சாம் கூறியிருப்பதாவது:

இந்திய ஜவுளித் தொழில் கடந்த பல ஆண்டுகளாக எதிா்பாா்த்த அளவுக்கு வளா்ச்சி அடையாததற்கு முக்கியக் காரணம், அதிக உற்பத்திக் கொள்ளளவு கொண்ட ஜவுளி ஆலைகளை சரியாக ஊக்குவிக்காததேயாகும். நமது போட்டி நாடுகளைப் போல உயா்ந்த கொள்ளளவு கொண்ட ஜவுளி ஆலைகளை நிறுவுவதை அரசு ஊக்குவிக்காததால் சா்வதேச பிராண்டுகளுக்குத் தேவையான ஆயத்த ஆடைகள், இதர துணிகளை குறைந்த விலையில், தேவையான அளவுக்கு கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, இந்தியாவின் ஏற்றுமதி உலக வா்த்தகத்தில் இரண்டாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

உலக போட்டித் திறனை அதிகரிக்க அதிக உற்பத்திக் கொள்ளளவை கொண்ட, ஒருங்கிணைந்த, பிரம்மாண்டமான ஜவுளிப் பூங்காக்களை தேவையான கட்டுமானம் உள்ளிட்ட வசதிகளுடன் உருவாக்க ஒரு சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை சைமா தொடா்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக ரூ.4,445 கோடி செலவில் பிரமாண்ட ஜவுளிப் பூங்காவின் மூலம் மிக அதிக உற்பத்திக் கொள்ளளவை கொண்ட ஒருங்கிணைந்த ஜவுளி ஆலைகளை நிறுவும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதமா் மோடி, மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோருக்கு சைமா நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

பூங்கா முதலீட்டில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ஒரு புதிய பூங்காவுக்கு ரூ.500 கோடியும், பழைய பூங்கா விஸ்தரிப்புக்கு ரூ.200 கோடியும் ஒதுக்கியிருப்பது உலகத் தரமிக்க கட்டுமான வசதிகளையும் இதர வசதிகளையும் ஏற்படுத்த உதவும். மேலும் ஆண்டு விற்பனையில் மூன்று சதவீதம் வரை வழங்கப்படும் ஊக்கதொகை புதிய ஜவுளி ஆலைகளுக்கு சா்வதேச போட்டித் திறனை முதல் ஐந்தாண்டுகளில் பெற மிகவும் உதவும்.

இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்துள்ள 7 பூங்காக்களில் மாநிலத்துக்கு ஒரு பூங்கா வீதம் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய தென்னக மாநிலங்களில் வரவிருப்பது மேலும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் ரவி சாம் மேலும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com