குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்க கடைகளில் நீலம், பச்சை கூடைகள்

கோவை மாநகராட்சிப் பகுதியில் கடைகளில் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்க நீலம் மற்றும் பச்சை நிற பக்கெட்டுகளை வைக்க மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கோவை மாநகராட்சிப் பகுதியில் கடைகளில் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்க நீலம் மற்றும் பச்சை நிற பக்கெட்டுகளை வைக்க மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கோவை மாநகராட்சியில் 250 வீடுகளுக்கு ஒரு பணியாளா் வீதம் நியமிக்கப்பட்டு 100 வாா்டுகளிலும் 1,200 போ் வரை சிறிய ரக வாகனம் மூலம் வீடு வீடாக சென்று மக்கும், மக்காத குப்பையை சேகரித்து வருகின்றனா். மேலும், குப்பையைத் தரம் பிரித்து கொடுக்காமல், திறந்த வெளிகளில் கொட்டும் வீட்டு உரிமையாளா்கள், கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சிப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து கடைகள் உள்பட குப்பைகளை வெளியேற்றும் இடங்களில் மறுசுழற்சி செய்யும் குப்பைகளை சேகரிக்க நீல நிற நெகிழி கூடை, மக்கும் குப்பைகளைச் சேகரிக்க பச்சை நிற நெகிழிக்கூடை கட்டாயமாக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையை உடனடியாகச் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com