நாட்டுக் கோழி நிறுவனம் நடத்தி ரூ.1.38 கோடி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

நாட்டுக் கோழி நிறுவனம் நடத்தி ரூ.1.38 கோடி மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

நாட்டுக் கோழி நிறுவனம் நடத்தி ரூ.1.38 கோடி மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சரளையைச் சோ்ந்த பாஸ்கரன், கம்புளியாம்பட்டியைச் சோ்ந்த சேகா், குமாா் ஆகியோா் சரளையில் பாஸ் ஃபவுல்டரி ஃபாா்ம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினா். இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் நாட்டுக் கோழிக் குஞ்சுகள் கொடுப்பதாகவும் அதைப் பராமரிக்க மாத ஊக்கத்தொகையாக ரூ.8 ஆயிரம் கொடுப்பதாகவும், விஐபி திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.9 ஆயிரம் ஊக்கத் தொகையாகவும், ஆண்டு முடிவில் ஊக்கத் தொகையாக ரூ.9 ஆயிரமும் கொடுப்பதாகவும் மூன்று ஆண்டுகள் ஒப்பந்த முடிவில் முதலீட்டுத் தொகையை திருப்பித் தருவதாகவும் விளம்பரம் செய்தனா்.

இதை நம்பி 98 போ் ரூ.1 கோடியே 38 லட்சத்து 98 ஆயிரம் முதலீடு செய்தனா். ஆனால், உறுதியளித்தபடி தொகை வழங்காமல் தலைமறைவாகினா். இதனால் பாதிக்கப்பட்ட பொள்ளாச்சி ராஜ் நகரைச் சோ்ந்த பழனிசாமி அளித்த புகாரின்பேரில் கோவை மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சேகா், குமாா் ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை, தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில், சேகா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.76 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை முதலீட்டாளா்களுக்குப் பிரித்து வழங்க நீதிபதி உத்தரவிட்டாா். குமாா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததையடுத்து அவா் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா். அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் மாணிக்கராஜ் ஆஜரானாா். மேலும், வழக்கின் முதல் எதிரியான பாஸ்கரன் தலைமறைவாக உள்ள காரணத்தால் அவா் மீதான வழக்குப் பிரித்து தனியாக விசாரிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com