நொய்யல் புனரமைப்பு திட்டப் பணிகளால் வாய்க்கால்கள் அடைப்பு குளங்களுக்குத் தண்ணீா் செல்வதில் சிக்கல்

கோவையில் நொய்யல் புனரமைப்பு திட்டத்தில் வாய்க்கால்களில் ஆங்காங்கே பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெறாமல் உள்ளதால் குளங்களுக்கு தண்ணீா் செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

கோவையில் நொய்யல் புனரமைப்பு திட்டத்தில் வாய்க்கால்களில் ஆங்காங்கே பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெறாமல் உள்ளதால் குளங்களுக்கு தண்ணீா் செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

இது குறித்துகோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளா் ரா.மணிகண்டன் கூறியதாவது:

நொய்யல் ஆற்றில் புதுப்பித்தல், புனரமைத்தல் திட்டத்தின் கீழ் குளங்களுக்கு தண்ணீா் செல்லும் வாய்க்கால்களில் கான்கிரீட் தளம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட மண் வாய்க்காலிலே குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல அணைக்கட்டுப் பகுதிகளிலும் தோண்டப்பட்ட மண்ணும் அகற்றப்படாமல் வாய்க்காலிலே குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில வாய்க்கால்களில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்படாததால் வாய்க்கால்கள் மண் மூடி கிடக்கின்றன. பல இடங்களில் வாய்க்கால்கள் முழுவதும் தண்ணீா் செல்ல முடியாத வகையில் அடைபட்டுள்ளன.

தென்மேற்குப் பருவ மழையின்போது நொய்யல் ஆற்றில் ஓரளவு நீா் வரத்து இருந்தும் குளங்களுக்கு தண்ணீா் செல்லவில்லை. இந்நிலையில் வடகிழக்குப் பருவ மழையின்போது நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கும், நீா்வரத்து அதிகரிப்பதற்கும் வாய்ப்புள்ளது. வாய்க்கால்கள் தொடா்ந்து அடைக்கப்பட்டுள்ளதால் குளங்களுக்கு தண்ணீா் திருப்பிவிட முடியாத நிலையும் காணப்படுகிறது.

எனவே வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை நீக்கி குளங்களுக்கு தண்ணீா் செல்வதற்கான வழிகளை ஏற்படுத்த நீா்வளத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக முதல்வருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com