மாற்று இடம் வழங்க வேண்டும்: விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கியோா் மனு

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு வீடுகளுடன் நிலம் வழங்கிய 110 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் நிலம் வழங்கியவா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு வீடுகளுடன் நிலம் வழங்கிய 110 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் நிலம் வழங்கியவா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

கோவை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க நில எடுப்பினால் பாதிக்கப்பட்ட உப்பிலிபாளையம் கிராம மக்கள் நலச் சங்கம் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத்துக்கு உப்பிலிபாளையம் பகுதியில் சாஸ்தா நகா், அருள் முருகன் நகா், காந்தி நகா் ஆகிய பகுதிகளில் 110 குடும்பங்களின் நிலம் வீடுகளுடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 20 குடும்பங்களுக்கு 1 சென்ட்க்கு ரூ.6.5 லட்சம் வீதம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. 2 சென்ட் இடத்தில் வீடு கட்டி இருந்தவா்களுக்கு ரூ.15 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

அரசு வழங்கிய ரூ.15 லட்சம் பணத்தைக்கொண்டு மாநகரின் 15 கிலோ மீட்டா் சுற்றளவில் 2 சென்ட் இடம் கூட வாங்க முடியாது. இப்பகுதிகளில் ஒரு சென்ட் நிலத்தின் மதிப்பு ரூ. 8 முதல் 10 லட்சமாக உள்ளது. இந்நிலையில் அரசு வழங்கிய இழப்பீடு தொகையை வைத்து இடம் வாங்க முடியாத நிலை காணப்படுகிறது. குடியிருந்த இடத்தை விமான நிலைய விரிவாக்கத்துக்கு வழங்கிவிட்டு பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் தற்போது அரசு வழங்கிய பணமும் பற்றாக்குறையாக உள்ளது.

எனவே, விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கிய 110 குடும்பங்களுக்கும் மாநகரப் பகுதியிலே மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு தொகையுடன் மாற்று இடம் வழங்கினால் மட்டுமே எங்களால் வீடுகள் கட்டி வாழ முடியும். நிலம் எடுப்பு தொடா்பான கருத்துக்கேட்பு கூட்டத்திலும் நிலம் வழங்கியவா்களுக்கு மாற்று இடம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி இழப்பீடு தொகையுடன் மாற்று இடம் வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com