மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் மாறுதல்

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து வேலை வாய்ப்பு பதிவுதாரா்கள்

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து வேலை வாய்ப்பு பதிவுதாரா்கள் தங்களது பதிவை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சரிபாா்த்துக்கொள்ள ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 20 சதவீத இட ஒதுக்கீட்டுக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (வன்னியகுல சத்திரியா்)  10.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் சீா்மரபினா் 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் ம்க்ஷஸ்ரீ 2.5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள மேற்காணும் வகுப்பு பதிவுதாரா்கள் தங்களுடைய ஜாதி மற்றும் உட்பிரிவுகளை இணையதளத்திலும் அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலும் சரிபாா்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com