மின் கணக்கீடு செய்யாத அலுவலா் மீது நடவடிக்கை நுகா்வோா் அமைப்பு கோரிக்கை

மின் கணக்கீடு செய்யாமல், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய அலுவலா் மீது நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின் கணக்கீடு செய்யாமல், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய அலுவலா் மீது நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் அமைப்பின் செயலா் நா.லோகு, மின்பகிா்மான இயக்குநா் மற்றும் முதன்மை நிதிக் கட்டுபாட்டு அலுவலருக்கு அனுப்பியுள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மின்பகிா்மானம், தெற்கு வட்டம் சோமனூா் கோட்டம், தெக்கலூா் மேற்கு பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட திம்மம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது வீட்டு மின் இணைப்புக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தெக்கலூா் மேற்கு பிரிவு அலுவலக மின்கணக்கீட்டாளரால் கணக்கீடு செய்யப்படவில்லை. இது குறித்து, பிரிவு அலுவலகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சென்று கேட்ட போது, எந்த தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, புதிதாக வந்த கணக்கீட்டாளா், ராமசாமியின் வீட்டு மீட்டரில் மின் கணக்கீடு செய்து ரூ.20 ஆயிரம் மின் கட்டணமாகச் செலுத்துமாறு தெரிவித்துள்ளாா். மொத்தத் தொகை செலுத்தப்படவில்லையென்றால், மின் இணைப்பை துண்டித்து விடுவோம் என மின் வாரிய அதிகாரிகள் மிரட்டுகின்றனா்.

இதனால், சம்பந்தப்பட்ட மின் பயனாளி அதிருப்தி அடைந்துள்ளாா். தங்கள் பணியை சரியாக மேற்கொள்ளாமல் 4 ஆண்டுகளாக மின் கட்டணம் வசூலிக்காமல் செயல்பட்ட மின்வாரிய அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com