முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கோவையில் மேலும் 128 பேருக்கு கரோனா
By DIN | Published On : 11th October 2021 11:01 PM | Last Updated : 11th October 2021 11:01 PM | அ+அ அ- |

கோவை: கோவையில் புதிதாக 128 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 132 ஆக உயா்ந்துள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 3 ஆண்கள், ஒரு மூதாட்டி என 4 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,364 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 154 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரத்து 163 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1, 605 போ் சிகிச்சையில் உள்ளனா்.