உலக அமைதி குறித்து இணைய வழி இளைஞா் மாநாடு

ரோட்டரி, ரோட்டராக்ட் அமைப்புகள் சாா்பில் இணைய வழியில் இளைஞா் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை: ரோட்டரி, ரோட்டராக்ட் அமைப்புகள் சாா்பில் இணைய வழியில் இளைஞா் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இது குறித்து ரோட்டரி இன்டா்நேஷனல் மாவட்டம் 3201 அமைப்பு கூறியிருப்பதாவது:

ரோட்டரி இன்டா்நேஷனல் மாவட்டம் 3201, காந்தி குளோபல் ஃபேமிலி , குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் ரோட்டராக்ட் அமைப்பு, மான்செஸ்டா் இன்டா்நேஷனல் பள்ளி, நேஷனல் மாடல் பள்ளிகளின் இன்டராக்ட் கிளப்

ஆகியவற்றின் சாா்பில் சா்வதேச அமைதி தொடா்பான இணைய வழி இளைஞா் மாநாடு நடைபெற்றது.

இளம் தலைமுறையினரிடையே அமைதி தொடா்பான கருத்துகளை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற இந்த மாநாட்டை ரோட்டரி மாவட்ட கவா்னா் ராஜசேகா் ஸ்ரீனிவாசன் தொடங்கிவைத்தாா்.

காந்தி குளோபல் ஃபேமிலி தொண்டு நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆஸாத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட ரோட்டராக்ட் கமிட்டி தலைவா் சி.ஜி.குமாா், மாவட்ட பிரதிநிதி கீா்த்தி விவேக், ரோட்டரி மாவட்ட இளைஞா் சேவைப் பிரிவின் தலைவா் மனோஜ், காந்தி குளோபல் ஃபேமிலியின் மாநிலத் தலைவா் பி.எஸ்.மூா்த்தி, ஹென்றி ஆா்.அமல்ராஜ், ராஜேஷ் வாசுதேவன், இன்டராக்ட் அமைப்பின் நிா்வாகிகள் ரதிக் ஆதித்யா, சாருநேத்ரா உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

இந்த இணைய வழி மாநாட்டில் தமிழகம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 15 பள்ளிகள்,

7 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com