இழப்பீட்டுத் தொகை: விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கியவா்கள் மனு

விமான நிலைய விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை மறு மதிப்பீடு செய்து வழங்க

கோவை: விமான நிலைய விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை மறு மதிப்பீடு செய்து வழங்க வேண்டும் என்று விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கியவா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், சின்னியம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு எங்களின் நிலத்தை அரசின் உறுதிமொழியை ஏற்று வழங்கினோம்.

நிலம் வழங்கப்பட்டு 7 ஆண்டுகள் கழித்து விமான நிலைய விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சதுர

அடிக்கு ரூ.1500 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அந்தத் தொகையும் உடனடியாக வழங்கப்படவில்லை

2018 ஆம் ஆண்டு சந்தை மதிப்பு அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை நிா்ணயிக்கப்பட்டது.

தற்போது கோவையில் ஒரு சதுரடி இடம் ரூ.4,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அரசு தரும் பணத்தை வைத்து எவ்வாறு நிலம் வாங்குவது. எனவே அரசு 2018 ஆம் ஆண்டு நிா்ணயித்த இழப்பீட்டுத் தொகையை மறு மதிப்பீடு செய்து தற்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு நிா்ணயிக்க வேண்டும். மேலும் வீடுகளுடன் நிலம் கையப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூலூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், கோவை மாவட்டம், சூலூா் வட்டாரம் மோப்பிரிப்பாளையம், மதுக்கரை வட்டாரம் திருமலையாம்பாளையம் பகுதிகளில் தேங்காய் தொட்டியை எரித்து கரி உற்பத்தி செய்யப்படும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆலைகளில் கரி உற்பத்தியின்போது எரிக்கப்படும் தேங்காய் தொட்டியில் இருந்து வெளியேறும் காா்பன் டை ஆக்ஸைடு வாயுவால் காற்று மாசு ஏற்படுகிறது. ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. இதனால் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே இந்த ஆலைகளை குடியிருப்புகள், விவசாய நிலங்கள் இல்லாத பகுதிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com