சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவை கரும்புகடை பகுதியில் திங்கள்கிழமை இரவு வேகமாகச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று இளைஞா் மீது மோதியது. இதில் அவா் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா்.

கோவை: கோவை கரும்புகடை பகுதியில் திங்கள்கிழமை இரவு வேகமாகச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று இளைஞா் மீது மோதியது. இதில் அவா் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா்.

இதையடுத்து சரக்கு வாகனத்தில் வந்த இருவரில் ஒருவா் அங்கிருந்து தப்பி ஓடினாா்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உக்கடம் போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை ஆய்வு செய்தபோது அதில் பல மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து உக்கடம் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா்.

போலீஸ் விசாரணையில் கடைகளில் விநியோகம் செய்வதற்காக சரக்கு வாகனத்தில் புகையிலைப் பொருள் எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. சரக்கு வாகனத்தில் இருந்த மற்றொரு நபரை பிடித்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com