வருமுன் காப்போம் திட்டம்: மாநகராட்சியில் இன்று தொடக்கம்

கோவை மாநகராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

கோவை: கோவை மாநகராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கலைஞா் வருமுன் காப்போம் திட்டத்தை அண்மையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதனைத் தொடா்ந்து கோவையில் இத்திட்டம் செவ்வாய்க்கிழமை சின்னவேடம்பட்டி மாநகராட்சிப் பள்ளியில் தொடங்க உள்ளது.

இத்திட்டத்தின்கீழ் கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் 36 முகாம்களும், மாநகராட்சியில் 4 முகாம்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை 9 முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் செயல்படும்.

இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் போன்ற 10 வகையான சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும்.

தவிர ரத்த பரிசோதனை, ஸ்கேன், இ.சி.ஜி, எக்கோ பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும்.

மேல் சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com