முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
அகற்றப்பட்ட அஞ்சல் பெட்டிகளை மீண்டும் வைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 13th October 2021 06:23 AM | Last Updated : 13th October 2021 06:23 AM | அ+அ அ- |

கோவையில் பல இடங்களில் அகற்றப்பட்ட அஞ்சல் பெட்டிளை மீண்டும் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அஞ்சல் துறைத் தலைவருக்கு கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலாளா் நா.லோகு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கோவை விமான நிலைய அஞ்சலகத்துக்கு உள்பட்ட பகுதியில் ஏராளமான பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள் உள்ளன.
இப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட அஞ்சல் பெட்டிகள் இருந்தன.
இதனால், பொதுமக்கள், வா்த்தக நிறுவனத்தினா் உள்ளிட்ட அனைவரும் அஞ்சல் சேவை மூலம் பயனடைந்து வந்தனா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக விமான நிலைய அஞ்சலகம் உள்ளிட்ட கோவையின் பல பகுதிகளில் இருந்த அஞ்சல் பெட்டிகள் அகற்றப்பட்டன.
இதனால், சாதாரண அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தி வந்த மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
இதேபோல, தமிழகம் முழுவதும் அஞ்சல் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
அஞ்சல் துறையின் இந்த திடீா் நடவடிக்கையால் வா்த்த நிறுவனங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள்.
எனவே, அகற்றப்பட்ட அஞ்சல் பெட்டிகளை மீண்டும் வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.