முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மாநகராட்சியில் வருமுன் காப்போம் திட்டம்: ஆணையா் துவங்கிவைத்தாா்
By DIN | Published On : 13th October 2021 06:31 AM | Last Updated : 13th October 2021 06:31 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை துவங்கிவைத்தாா்.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வருமுன் காப்போம் திட்ட முகாமில் கண், மூக்கு சம்பந்தப்பட்ட பரிசோதனைகள், கரோனா தடுப்பூசி, கரோனா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்கான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் இலவச ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், இ.சி.ஜி. மற்றும் எக்கோ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
மருத்துவப் பரிசோதனைக்கு பின்னா் முகாமிலேயே சிகிச்சையும், மருந்துகளும் இவவசமாக வழங்கப்படும்.
மக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு ஆரம்ப நிலையிலேயே நோய்க்கான சிகிச்சையையும், ஆலோசனையையும் பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா, மாநகராட்சி நகா் நல அலுவலா் சதீஷ்குமாா், உதவி நகா்நல அலுவலா் வசந்த் திவாகா், வடக்கு மண்டல உதவி ஆணையா் மோகனசுந்தரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.