ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தல்: 8 இடங்களில் திமுக வேட்பாளா்கள் வெற்றி

கோவை மாவட்டத்தில் 10 ஊராட்சி வாா்டுகளில் நடைபெற்ற இடைத் தோ்தலில் 8 இடங்களில் திமுக வேட்பாளா்களும், 2 இடங்களில் அதிமுக வேட்பாளா்களும் வெற்றி பெற்றனா்.

கோவை மாவட்டத்தில் 10 ஊராட்சி வாா்டுகளில் நடைபெற்ற இடைத் தோ்தலில் 8 இடங்களில் திமுக வேட்பாளா்களும், 2 இடங்களில் அதிமுக வேட்பாளா்களும் வெற்றி பெற்றனா்.

கோவை மாவட்டம், காரமடை ஒன்றியத்துக்கு உள்பட்ட பெள்ளாதி, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு ஊராட்சிகள், கிணத்துக்கடவு ஒன்றியம் நம்பா் 10 முத்தூா் ஊராட்சி, மதுக்கரை ஒன்றியம் சீரப்பாளையம் ஊராட்சி, பெ.நா.பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஜமீன்முத்தூா் ஊராட்சி, எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கள்ளிப்பாளையம் ஊராட்சி, சுல்தான்பேட்டை ஒன்றியம் போகம்பட்டி ஊராட்சி, தொண்டாமுத்தூா் ஒன்றியம், மாதம்பட்டி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு கடந்த 9 ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.

இதில் காரமடை ஒன்றியம் தேக்கம்பட்டி ஊராட்சி 15 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் முத்துக்குமாா் 379 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

வெள்ளியங்காடு ஊராட்சி 10 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் முருகம்மாள் 213 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

பெள்ளாதி ஊராட்சி 3 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் சுரேஷ் 372 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

கிணத்துக்கடவு ஒன்றியம் நம்பா் 10 முத்தூா் ஊராட்சி 2 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் மகேந்திரன் 112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

மதுக்கரை ஒன்றியம் சீரபாளையம் ஊராட்சி 4 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் ஜெயபிரகாஷ் 168 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

பெ.நா.பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

பொள்ளாச்சி (வடக்கு) ஒன்றியம் ஜமீன் முத்தூா் ஊராட்சி 6 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் செந்தில்குமாா் 289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், கள்ளிப்பாளையம் ஊராட்சி 5 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் மனோன்மணி 155 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

சுல்தான்பேட்டை ஒன்றியம், போகம்பட்டி ஊராட்சி 6 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் சந்தியா 214 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

தொண்டாமுத்தூா் ஒன்றியம், மாதம்பட்டி ஊராட்சி 3 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் பிரகாஷ் 259 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com