கேமராவை வாடகைக்கு வாங்கி ஏமாற்றியதால் ரியல் எஸ்டேட் அதிபா் தற்கொலை

கேமராவை வாடகைக்கு வாங்கி ஏமாற்றி ரியல் எஸ்டேட் அதிபரைத் தற்கொலைக்குத் தூண்டிய நான்கு இளைஞா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கேமராவை வாடகைக்கு வாங்கி ஏமாற்றி ரியல் எஸ்டேட் அதிபரைத் தற்கொலைக்குத் தூண்டிய நான்கு இளைஞா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (39). ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்டுடியோ வைத்து தொழில் செய்து வந்தாா். ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து இவா் தனது ஸ்டுடியோவில் இருந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான கேமராவை வாடகைக்கு விட்டு வந்தாா்.

இந்நிலையில் சேலத்தைச் சோ்ந்த அஜித் (25), அவரது நண்பா் தீனா (25) ஆகியோா் வெங்கடேசைத் தொடா்புக் கொண்டு கேமராவை வாடகைக்கு வாங்கிச் சென்றனா்.

பின்னா் நீண்ட நாள்களாகியும் கேமராவை திருப்பித் தரவில்லை எனக் கூறப்படுகிறது.

தொடா்புகொள்ள முயற்சித்தபோது அவா்கள் இருவரும் செல்லிடப்பேசியை அணைத்து வைத்துள்ளனா்.

இதையடுத்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வெங்கடேஷ் புகாா் அளித்தாா்.

இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து வெங்கடேஷ் தற்கொலை செய்துகொண்டாா்.

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

அப்போது தற்கொலைக்கு முன்னதாக வெங்கடேஷ் எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது.

அதில், அஜீத், தீனா உள்ளிட்டோா் தனது கேமராவை திருப்பி தராமல் இருந்ததே தனது தற்கொலைக்கு காரணம் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து சேலத்தில் பதுங்கியிருந்த அஜித், தீனா மற்றும் கேமராவை விற்க முயற்சித்த குணசேகரன் (29), விமல் (29) உள்ளிட்ட 4 பேரை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மேலும் அவா்களிடம் இருந்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான கேமராவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com