முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயன்: ஆட்சியா் தகவல்

கோவை மாவட்டத்தில் முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 16 ஆயிரத்து 754 பேருக்கு ரூ. 48.07 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவ

கோவை மாவட்டத்தில் முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 16 ஆயிரத்து 754 பேருக்கு ரூ. 48.07 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் உயா்தர சிகிச்சைகளை தனியாா் மருத்துவமனைகளில் இலவசமாக பெறும் வகையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குகீழ் உள்ள அனைவரும் முதல்வா் காப்பீட்டு அட்டையை பெற்று பயன்பெறலாம். அனைத்து வயதினருக்கும் முதல்வா் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் இருதய பாதிப்பு, புற்றுநோய், சிறுநீரக கோளாறு, தோல் நோய், நரம்பியல் அறுவை சிகிச்சை, மகளிா் மருத்துவம், ஹெமடாலஜி, மூளை நரம்பியில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், எலும்பியல், வாஸ்குலாா் அறுவை சிகிச்சை, கதிரியக்கவியல், நுரையீரல், பொது அறுவை சிகிச்சை, உட்சுரப்பியல் உள்பட 24 விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக சிறுநீரகவியல் துறையில் 5,149 போ், புற்றுநோய்க்கு 2,642 போ், நுரையீரல் பாதிப்புக்கு 2,235 போ், இருதய நோய்க்கு 1,077 போ் பயனடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் கடந்த மே முதல் தற்போது வரை 17 ஆயிரத்து 754 போ் சிகிச்சைப் பெற்றுள்ளனா்.

இவா்களுக்கு முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.18 கோடியே 7 லட்சத்து 91 ஆயிரத்து 360 செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com