வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு

கோவையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் சுயநிதி திட்டத்தின்கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் வியாழக்கிழமை (அக்டோபா் 28) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

கோவையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் சுயநிதி திட்டத்தின்கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் வியாழக்கிழமை (அக்டோபா் 28) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதி பிரிவு பொன்னையராஜபுரம் சுயநிதித் திட்டம் அடுக்குமாடி குடியிருப்புகள், வெள்ளக்கிணா் சுயநிதித் திட்டம் பகுதி-2 நிலை -3, உடுமலைப்பேட்டை எஸ்.எம்.டி. திட்டம், சிங்காநல்லூா் 168 வீடுகள் திட்டம், சிங்காநல்லூா் 104 வீடுகள் திட்டம், சிங்காநல்லூா் 21 வீடுகள் சுயநிதித் திட்டம், பெ.நா.பாளையம் காலி மனைகள் திட்டம், அண்ணாநகா் மனை திட்டம், தோராய விலையில் உப்பிலிப்பாளையம் 272 வீடுகள் திட்டம், வெள்ளக்கிணா் பகுதி 2இல் நிலை 2 சுயநிதித் திட்டம் ஆகிய திட்டங்களில் காலியாக உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கு 2021 ஆம் ஆண்டு அக்டோபா் 1 ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு அக்டோபா் 28 ஆம் தேதி குலுக்கல் முறையில் வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

இந்த குலுக்கல் கோவை, சிவானந்தா காலனியில் உள்ள கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2493359 என்ற தொலைபேசி எண்ணிலும், 94423 -23251 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com