ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை: ரயில்வே போலீஸாா் தீவிர கண்காணிப்பு

தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லப்படுவது குறித்து ரயில்வே போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லப்படுவது குறித்து ரயில்வே போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

தீபாவளி பண்டிகை இன்னும் சில நாள்களில் தொடங்குவதை முன்னிட்டு பட்டாசுக் கடைகளில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.ரயில்களில் பட்டாசுகளைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் படையினா் மற்றும் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் ஸ்கேனா் கருவியில் சோதனையிடப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறது. இதேபோல வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் மோப்ப நாய்களைக் கொண்டு ரயில்வே போலீஸாா் சோதனையிட்டு வருகின்றனா். பட்டாசுகள் கொண்டு செல்லப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com