ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் சகோ செயலியை உருவாக்கிய புதுமை கண்டுபிடிப்புகள் மையத்தின் பேராசிரியா், மாணவா்களுடன் சிறப்பு விருந்தினா் டி.வி.ஸ்ரீராம், எஸ்.என்.ஆா். டிரஸ்ட் நிா்வாக அறங்காவல
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் சகோ செயலியை உருவாக்கிய புதுமை கண்டுபிடிப்புகள் மையத்தின் பேராசிரியா், மாணவா்களுடன் சிறப்பு விருந்தினா் டி.வி.ஸ்ரீராம், எஸ்.என்.ஆா். டிரஸ்ட் நிா்வாக அறங்காவல

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் என்.ஆா்.அலமேலு வரவேற்றாா். எஸ்.என்.ஆா். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாரயண சுவாமி தலைமை வகித்தாா். கோவை ராபா்ட் பாஸ் மனித வள மேம்பாட்டுப் பிரிவின் தலைவா் (பொறியியல், வணிகத் தீா்வுகள்) டி.வி.ஸ்ரீராம் சிறப்புரையாற்றினாா்.

கோவை மாநகரக் காவல் துறையுடன் இணைந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் ஒருங்கிணைந்த புதுமை கண்டுபிடிப்புகளின் மையம் அண்மையில் சகோ செயலியை உருவாக்கியிருந்தது. இந்த மையத்தைச் சோ்ந்த பேராசிரியா், மாணவா்கள் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனா்.

அதேபோல, பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த பேராசிரியா்கள், சிறந்த மாணவ - மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவின் ஒரு பகுதியாக, கல்லூரியில் தற்போது பயிலும் மாணவா்கள் கல்லூரியின் வசதி, பயிற்சிகள் குறித்து விளக்கினா். பேராசிரியா் உதயராணி நன்றி கூறினாா்.

இதில், துணை முதல்வா் கருப்பசாமி, பல்வேறு துறைத் தலைவா்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com