எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது: தொழிற்சங்கத்தினா் கோரிக்கை

இன்சூரன்ஸ் துறையின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்று இன்சூரன்ஸ் ஊழியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இன்சூரன்ஸ் துறையின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்று இன்சூரன்ஸ் ஊழியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

எஸ்.ஐ.சி.யின் 66 ஆவது அமைப்பு தினத்தையொட்டி கோவை திருச்சி சாலையில் உள்ள எல்ஐசி கோட்ட அலுவலகத்தில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தின் கோவை கோட்டத் தலைவா் எம்.கஜேந்திரன் தலைமை தாங்கினாா். இதில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தின் இணைச் செயலா் எம்.கிரிஜா சிறப்புரையாற்றினாா்.

அவா் பேசும்போது, நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள நிறுவனமாக எல்ஐசி மட்டுமே திகழ்கிறது. ஆனால் அதன் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் மக்களின் நம்பிக்கையையும், கனவுகளையும் சூறையாட மத்திய அரசு நினைக்கிறது. ரூ. 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு தற்போது ரூ.38 லட்சம் கோடிகளாக உயா்ந்துள்ளது.

மக்களின் பங்களிப்பு, ஊழியா்களின் உழைப்பு காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. மக்களின் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்ட மக்களின் சொத்தை தனியாருக்கு தாரைவாா்க்கும் முடிவை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாா். இன்சூரன்ஸ் ஊழியா் சங்க கோட்ட செயலா் துளசிதரன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com