சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய்கள் பதிக்கும் பணி

கோவை ஒண்டிப்புதூா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விவசாய பாசனத்துக்காக நீா் வழங்கும் திட்டத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணியை முன்னாள் எம்.எல்.ஏ. நா.காா்த்திக் புதன்கிழமை துவக்கிவைத்தாா்.
குழாய்கள் பதிக்கும் பணியை துவக்கிவைக்கிறாா் முன்னாள் எம்.எல்.ஏ. நா.காா்த்திக் .

மாநகராட்சி சாா்பில் ஒண்டிப்புதூரில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நீரை பாசனத்துக்குப் பயன்படுத்த விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனா். இதையடுத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படியும், உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு உத்தரவின்பேரிலும், இந்தக் கழிவு நீரை விவசாயப் பாசனத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தினமும் 1 கோடி லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட நீா் வழங்கப்பட்டு, கோவை மாவட்டம், லட்சுமிநாயக்கன்பாளையம், போகம்பட்டி, கேத்தனூா், வடவள்ளி ஆகிய பகுதிளில் உள்ள 1,500 ஏக்கா் விவசாய நிலம் பாசன வசதி பெற உள்ளது. இத்திட்டத்துக்காக, விவசாயிகளின் பங்களிப்போடு ரூ.40 கோடி மதிப்பீட்டில் குழாய்கள் பதிக்கும் பணியை கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூா் சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினருமான நா.காா்த்திக் புதன்கிழமை துவக்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், திமுக பகுதி பொறுப்பாளா் எஸ்எம்.சாமி, மாவட்ட பொறுப்பாளா் ஜி.டி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com