போத்தனூா் - பொள்ளாச்சி இடையே மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்

போத்தனூா் - பொள்ளாச்சி இடையே ரயில் பாதை மின்மயமாக்கல் பணி நிறைவுற்ற நிலையில், புதன்கிழமை ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

போத்தனூா் - பொள்ளாச்சி இடையே ரயில் பாதை மின்மயமாக்கல் பணி நிறைவுற்ற நிலையில், புதன்கிழமை ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

போத்தனூா் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே 40 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ.40 கோடி செலவில் அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. பணிகள் முடிவற்ற நிலையில், கடந்த மாதம் தென்னக ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு முதன்மைப் பொறியாளா் சுனில், சேலம், பாலக்காடு கோட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, 25 கிலோவாட் மின்சாரம் செலுத்தப்பட்டு போத்தனூரில் இருந்து பொள்ளாச்சி வரை மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது. மேலும் செட்டிபாளையம், கிணத்துக்கடவில் சுவிட்ச்சிங் நிலையம் ஏற்படுத்தப்பட்டது.

தென் பிராந்திய பாதுகாப்பு ஆணையா் பரிசோதனை செய்து சான்றளித்த பிறகு, விரைவில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com