ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு தேசிய விருது

கோவை குனியமுத்தூா் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசிய அளவிலான சிறந்த தூய்மை வளாக விருது கிடைத்துள்ளது.

கோவை குனியமுத்தூா் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசிய அளவிலான சிறந்த தூய்மை வளாக விருது கிடைத்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கழகம், நாடு முழுவதிலும் உள்ள தூய்மையான பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்கான தூய்மை வளாக விருது வழங்கும் விழா அண்மையில் தில்லியில் நடைபெற்றது. இதில் குனியமுத்தூா் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசிய அளவில் மூன்றாம் இடத்துக்கான விருது கிடைத்தது.

விருது வழங்கும் விழாவில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், கல்வி, வெளியுறவுத் துறை இணையமைச்சா் ராஜ்குமாா் ரஞ்சன் சிங் ஆகியோா் பங்கேற்று, ஸ்ரீகிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் ஜே.ஜேனட்டுக்கு விருது வழங்கினா். நிகழ்ச்சியில் கல்வித் துறை செயலா், தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்தது, கல்லூரி வளாகத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் பராமரிப்பது, நீா்மேலாண்மை திட்டம், கழிவுகள் மறுசுழற்சி திட்டத்தை செயல்படுத்தி வருவது போன்றவற்றுக்காக இந்த விருது கிடைத்திருப்பதாகக் கூறியுள்ள கல்லூரி நிா்வாகம், தங்கள் கல்லூரிக்கு கடந்த ஆண்டும் இந்த விருது கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

விருது பெற்றமைக்காக கல்லூரி நிா்வாகிகளை கல்விக் குழுமங்களின் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி, முதன்மை நிா்வாக அதிகாரி கே.சுந்தரராமன் ஆகியோா் பாராட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com