ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில்ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் ஏஐசிடிஇ நிதியுதவியுடன் ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில்ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் ஏஐசிடிஇ நிதியுதவியுடன் ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது.

கல்லூரியின் மேலாண்மையியல் புலம் சாா்பில் ஏஐசிடிஇ பயிற்சி, கற்றல் அகாதெமியின் நிதியுதவியுடன் மாணவா்களுக்கு புதுமையான கல்விசாா் கற்பித்தல், கற்றல் என்ற தலைப்பில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெறுகிறது.

செப்டம்பா் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை இணைய வழியில் நடைபெறும் இந்தப் பயிற்சியின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரியின் முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா், உயா்கல்வித் துறையைச் சோ்ந்த துறைசாா் வல்லுநா்கள் பயிற்றுவிப்பதற்குரிய இ-உள்ளடக்கத் தகவல்களை வெளியிட்டாா்.

கல்லூரியின் கல்விப்புல முதன்மையா் ஹேனா ரேவதி, மேலாண்மையியல் புல இயக்குநா் பாமினி ராஜசேகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஐ.பா்வின் பானு ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இந்தப் பயிற்சியின் அமா்வுகள் மெய்நிகா் ஆய்வகங்கள், கலப்பு கல்விமுறை, கல்வி குறித்த ஆய்வுகள், பணித்தாள் அடிப்படையிலான கற்றல் உள்ளிட்டவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com