அகவிலைப்படி உயா்வு: தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் வரவேற்பு

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அரசு ஊழியா்களுக்கான அகவிலைப் படி உயா்வு உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் வரவேற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அரசு ஊழியா்களுக்கான அகவிலைப் படி உயா்வு உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் வரவேற்றுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் கோவை மாவட்டத் தலைவா் இரா.தேசிங்குராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நடைபெற்று வரும் சட்டப் பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அரசு அலுவலா்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளாா்.

இதில் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1முதல் அகவிலைப்படி உயா்வு, சத்துணவுப் பணியாளா்களின் ஓய்வு வயது உயா்வு, அரசு அலுவலா்களின் கூடுதல் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்கத் தொகை உயா்வு, அரசுப் பள்ளிகளில் தேவைக்கு ஏற்ப பணியிடங்கள் நிறப்புதல், போராட்டக் காலங்களை பணிக் காலமாக அறிவிப்பு, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சீரமைப்பு, அரசு அலுவலா்களுக்கு பவானிசாகா் பயிற்சி மையத்தில் நடைபெற்று வந்த பயிற்சிகளை மாவட்டத்தில் மேற்கொள்ள அனுமதி, கருவூலத் துறையில் ஐ.எஃப்.ஹெச்.ஆா்.எம்.எஸ். திட்டப் பயிற்சி உள்பட 13 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளாா்.

அரசு அலுவலா்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியம் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com