ஆன்லைன் குறைகேட்புக் கூட்டத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
By DIN | Published On : 10th September 2021 05:11 AM | Last Updated : 10th September 2021 05:11 AM | அ+அ அ- |

கோவையில் வாரம்தோறும் திங்கள்கிழமை ஆன்லைன் மூலம் நடைபெறும் மக்கள் குறைகேட்புக் கூட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலமாக வாரம்தோறும் திங்கள்கிழமை காலை 11 முதல் நண்பகல் 1.30 மணி வரை குறைகேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் அந்தந்த வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தமது கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட துணை ஆட்சியரிடம் நேரடியாக அளிக்கலாம். மேலும், அந்த கோரிக்கை தொடா்பான விவரத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்தே இணைய வழியாக ஆட்சியரிடம் தெரிவிக்கலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வட்டாட்சியா் அலுவலகங்களில் செய்யப்பட்டுள்ளன.
எனவே பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை திங்கள்கிழமைதோறும் ஆன்லைன் மூலம் அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.