தடுப்பூசி முகாம்களில் காய்ச்சல் மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை

கோவையில் பெரும்பாலான கரோனா தடுப்பூசி முகாம்களில் காய்ச்சலுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

கோவையில் பெரும்பாலான கரோனா தடுப்பூசி முகாம்களில் காய்ச்சலுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

கோவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நாள்தோறும் சராசரியாக 100க்கும் மேற்பட்ட மையங்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களில் சிலருக்கு கடுமையான தலைவலி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களுக்கு மேற்கண்ட பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களுக்கு தடுப்பூசி மையங்களிலேயே 2 பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தன. காய்ச்சல் இருந்தால் மட்டுமே எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வந்தது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக பாராசிட்டமால் உள்பட கரோனா அறிகுறிகளுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை தனியாக வழங்க வேண்டாம் என்று தனியாா் மருந்தகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களுக்கு கடந்த சில நாள்களாக பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியாா் மருந்தகங்களிலும் மருத்துவா் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்கப்படாததால் பொதுமக்கள் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது: அனைத்து கரோனா தடுப்பூசி மையங்களிலும் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அனைவருக்கும் காய்ச்சல், தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை. அப்படியே காய்ச்சல் ஏற்பட்டாலும் 24 மணி நேரத்தில் மீண்டும் சரியாகிவிடும். இதனால் மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. மேலும் அனைவருக்கும் மாத்திரைகள் தேவைப்படாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com