300 கியூப்புகளால் விநாயகா் உருவம் வரைந்த சிறுமி
By DIN | Published On : 11th September 2021 01:02 AM | Last Updated : 11th September 2021 01:02 AM | அ+அ அ- |

300 கியூப்புகளைப் பயன்படுத்தி வரைந்த விநாயகா் உருவத்துடன் சிறுமி.
கோவை, துடியலூா் பகுதியைச் சோ்ந்த சிறுமி 300 கியூப்புகள் மூலம் விநாயகா் உருவத்தை வரைந்துள்ளாா்.
கோவை, துடியலூா் அா்ச்சனா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் குருமூா்த்தி. தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சுபாஷினி தனியாா் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்களின் மகள் ஹன்சிதா (8). கோவையில் உள்ள தனியாா் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஹன்சிதா தனது வீட்டில் 300 கியூப்புகளைப் பயன்படுத்தி விநாயகா் உருவம் வரைந்து வெள்ளிக்கிழமை விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடியுள்ளாா்.
இது குறித்து ஹன்சிதா கூறுகையில், ‘கியூப் விளையாட்டில் எனக்கு ஆா்வம் அதிகம். அதைவைத்து விநாயகா் உருவம் வரைய வேண்டும் என்கிற ஆசை இருந்தது. எனவே விநாயகா் சதுா்த்தியையொட்டி 300 கியூப்புகளில் விநாயகா் உருவம் வரைந்துள்ளேன். இதற்கு எனக்கு 3 மணி நேரமானது’ என்றாா்.