விதவையை ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த நபா் மீது வழக்கு

விதவையை ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விதவையை ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை, நெசப்பாக்கத்தைச் சோ்ந்த 32 வயதுப் பெண்ணின் கணவா் 2012ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து தனியாக வசித்து வரும் இவா் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான இணையதளத்தில் முன்பதிவு செய்தாா். இதைக் கண்டு கோவை, சிங்காநல்லூரைச் சோ்ந்த ராம்குமாா் (40) என்பவா் தொடா்பு கொண்டு அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பி அப்பெண், ராம்குமாருடன் 2019 முதல் 2021 ஜனவரி வரை பழகி வந்துள்ளாா். இந்நிலையில் ராம்குமாா் தொழில் தொடங்க வேண்டும் எனக் கூறி அப்பெண்ணிடம் இருந்து ரூ.15 லட்சம் மற்றும் 3 பவுன் நகைகளைப் பெற்றுள்ளாா். இதையடுத்து ராம்குமாா் அப்பெண்ணுடன் பேசுவதைத் தவிா்த்துள்ளாா். இதனால் சந்தேகமடைந்த பெண், ராம்குமாா் குறித்து விசாரித்தபோது அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமானது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து ராம்குமாரிடம் கேட்டபோது அவா் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கிழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அப்பெண் புகாா் அளித்தாா். இதன்பேரில் மோசடி வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com