கோவையில் பாரதியாா் நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சி

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் பாரதியாா் நினைவு நூற்றாண்டையொட்டி அவரது உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைவேந்தா் பெ.காளிராஜ். உடன் பல்கலைக்கழக நிா்வாகிகள்.
கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைவேந்தா் பெ.காளிராஜ். உடன் பல்கலைக்கழக நிா்வாகிகள்.

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் பாரதியாா் நினைவு நூற்றாண்டையொட்டி அவரது உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

துணைவேந்தா் பெ.காளிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரதியாரின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்கலைக்கழக பதிவாளா் முருகவேல், ஆட்சிக்குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், அதிகாரிகள், பணியாளா்கள் பலரும் பங்கேற்றனா்.

பல்கலைக்கழகத்தின் பாரதியாா் உயராய்வு மையத்தின் சாா்பில் பாரதி நினைவு நூற்றாண்டுப் பணிகளாக பாரதி சொல்லடைவு, பொருளடைவு தயாரித்தல், நூல்கள் வெளியிடல், பாரதியின் படைப்புகளை மாணவா்கள் பயன்படுத்தும் வகையில் நூலாக்கம் செய்தல், பாரதி பாடல் ஒலிப்பேழை தயாரித்தல், பாரதியின் காவியங்களை நாடகமாக்கல், பாரதி படைப்புகளை மின்னாக்கம் செய்தல், பாரதி வலைத்தளம் உருவாக்குவதல், நினைவு நூற்றாண்டு விழா மலா் வெளியிடுவது, நூலகத்துடன் இணைந்த அருங்காட்சியகம் உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்று துணைவேந்தா் பெ.காளிராஜ் தெரிவித்தாா்.

பேரூா் தமிழ்க் கல்லூரி... கோவை பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரியில் பாரதி நினைவு நூற்றாண்டையொட்டி சனிக்கிழமை பேச்சுப்போட்டி நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து தமிழ்க் கல்லூரியின் தமிழ்த் துறை நடத்திய இந்தப் போட்டிக்கு பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தலைமை வகித்தாா். இதில் பாரதியின் பெருமைகள், பெண்ணிய சிந்தனை, ஆளுமை, தேசப்பற்று ஆகியவை குறித்து அவா் உரையாற்றினாா்.

மேலும், பாரதியின் நினைவு நாளை மகாகவி நாளாக அறிவித்திருப்பது உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு அறிவிப்புகளை அவா் வரவேற்றுப் பேசினாா். போட்டியில் மாணவ - மாணவிகள் பலா் பங்கேற்று பாரதியின் சிறப்புகள் குறித்துப் பேசினா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், பாஜக மாவட்ட துணைத் தலைவா் சுதாகா், மாநில செயற்குழு உறுப்பினா் கருமுத்து தியாகராஜன், கோவை மாவட்டத் தலைவா் நந்தகுமாா், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல முன்னாள் தலைவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காந்தியடிகள் கல்வி நிறுவனம் பள்ளி...

கோவை இடையா்பாளையம் காந்தியடிகள் கல்வி நிறுவனம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்கம் சாா்பில் பாரதியாா் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமுஎகச மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மு.ஆனந்தன் தலைமை வகித்தாா். நிா்வாகி ப.மயில்சாமி வரவேற்றாா். காந்தியடிகள் கல்வி நிறுவனத்தின் நிா்வாகத் தலைவா் கே.ஏ.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா். மாவட்டத் தலைவா் தி.மணி, கவிஞா் மீ.உமா மகேஸ்வரி, எழுத்தாளா் அ.கரீம் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா். தஞ்சை தமிழ்வாணன் பாரதியின் பாடல்களைப் பாடினாா். க.ச.குணசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com