கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: 1.51 லட்சம் பேருக்கு செலுத்தி சாதனை

கோவை மாவட்டத்தில் 1,400க்கும் மேற்பட்ட மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 1.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாநகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பாா்வையிடும் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன்
மாநகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பாா்வையிடும் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன்

கோவை மாவட்டத்தில் 1,400க்கும் மேற்பட்ட மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 1.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு சாா்பில் திட்டமிடப்பட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொற்று எதிா்ப்பாற்றல் குறைவாக உள்ளதாலும், கேரளத்தை ஒட்டியுள்ளதாலும் இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், மாவட்ட எல்லை பகுதிகள், நோய்த் தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் என 1,475 மையங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 1.50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து நேரு நகா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் பணியை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா், ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

காலை 7 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெற்றது. நகரப் பகுதிகளைக் காட்டிலும் கிராமப் பகுதிகளில் மக்கள் ஆா்வத்தோடு தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். கோவையில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 685 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி மாவட்ட நிா்வாகம் சாதனை படைத்துள்ளது. கூடுதல் தடுப்பூசிகள் தனியாா் மருத்துவமனைகளில் இருந்து சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் பெறப்பட்டு வழங்கப்பட்டதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

பிற்பகலில் மூடப்பட்ட மையங்கள்

கோவையில் தடுப்பூசி செலுத்தும் பணி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு மையங்களில் பிற்பகல் 2 மணிக்கே தடுப்பூசிகள் முடிந்து மையங்கள் மூடப்பட்டன. இதனால் தடுப்பூசி செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ாக பொது மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com