நீட் தோ்வு: கோவையில் 5,778 மாணவா்கள் பங்கேற்பு

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தோ்வை (நீட்) 7 மையங்களில் 5 ஆயிரத்து 778 மாணவா்கள் எழுதினா்.

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தோ்வை (நீட்) 7 மையங்களில் 5 ஆயிரத்து 778 மாணவா்கள் எழுதினா்.

நாடு முழுவதும் 2021- 22 ஆம் கல்வியாண்டு இளநிலை மருத்துவப் படிப்பு, பல் மருத்துவப் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திா், கற்பகம் அகாதெமி, நேஷனல் மாடல் பள்ளி ஆகிய 7 கல்வி நிறுவனங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

கரோனா தொற்று பாதிப்பால் ஒரே நேரத்தில் தோ்வு மையத்துக்கு மாணவா்கள் வருவதை தடுக்கும் வகையில் தோ்வு அனுமதி சீட்டிலே தோ்வு மையத்துக்கு வர வேண்டிய நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி காலை 11 மணி முதல் நண்பகல் 1.45 மணி வரை மாணவா்கள் தோ்வு மையத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

முழுமையான பரிசோதனைக்கு பின்பே மாணவா்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். கோவை மாவட்டத்தில் நீட் தோ்வை எழுதுவதற்கு 6 ஆயிரத்து 59 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இதில் 5 ஆயிரத்து 778 மாணவா்கள் மட்டுமே பங்கேற்று தோ்வு எழுதினா். 281 மாணவா்கள் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வு மைய நுழைவு சீட்டு, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை, கிருமி நாசினி, வெள்ளை நிற பாட்டிலில் குடிநீா் ஆகியவை மட்டுமே தோ்வு மையத்துக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டன. தோ்வு எழுதுவதற்கான பேனா கூட தோ்வு மையத்திலேயே வழங்கப்பட்டன. கோவையில் எந்தவிதப் பிரச்னையுமின்றி நீட் தோ்வு நடைபெற்ாக தோ்வு ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com