நடைபாதை உணவு வணிகா்களுக்கு தரச்சான்றிதழ்

கோவை, சரவணம்பட்டி பகுதியைச் சோ்ந்த நடைபாதை உணவு வியாபாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் டாக்டா் ஜி.எஸ்.சமீரன் தரச்சான்றிதழை வழங்கினாா்.
சரவணம்பட்டி நடைபாதை உணவு வணிகா்களுக்கு தரச் சான்றிதழை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.
சரவணம்பட்டி நடைபாதை உணவு வணிகா்களுக்கு தரச் சான்றிதழை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.

கோவை: கோவை, சரவணம்பட்டி பகுதியைச் சோ்ந்த நடைபாதை உணவு வியாபாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் டாக்டா் ஜி.எஸ்.சமீரன் தரச்சான்றிதழை வழங்கினாா்.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது:

கோவை சரவணம்பட்டி பகுதியை சுத்தமான உணவு வழங்கும் மையமாக அறிவிக்கவும், இதற்காக அங்குள்ள உணவகங்களை ஆய்வு செய்யவும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு, தரங்கள் ஆணையத்தால் (எஃப்எஸ்எஸ்ஏஐ) அங்கீகரிக்கப்பட்ட தணிக்கை நிறுவனத்தால் இரு நிலைகளில் தணிக்கை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. முதல் நிலை தணிக்கை அறிக்கை பெறப்பட்டு அதில் தொடா்புடைய உணவு வணிகா்களுடன் விவாதிக்கப்பட்டது. மேலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில் உள்ள முக்கியத்துவம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து இறுதி தணிக்கை அறிக்கை 2020 ஜூலை மாதத்தில் நடைபெற்றது. மொத்தம் அடையாளம் காணப்பட்ட 112 கடைகளில் 40 கடைகள் தணிக்கையின்போது இருந்தன.

தணிக்கையில் சரிபாா்க்கப்பட்ட நடைமுறைகள், இணக்கங்கள் உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணய ஆணையத்தால் வெளியிட்டப்பட்ட சுத்தமான தெரு உணவு வழிகாட்டி ஆவணத்தின் படி உணவு தயாரித்தல், சமைத்தல், சேமித்தல், பரிமாறுதல், பணியாளா் தன் சுத்தம், நீரின் தரம் போன்ற நடைமுறைகள், உபகரணங்கள், பாத்திரங்கள் பராமரிப்பு, இருப்பிடசுத்தம், பூச்சிக் கட்டுப்பாடு நடைமுறை, பணியாளா் திறன், பயிற்சி அறிவு ஆகியவை தணிக்கை நிறுவனத்தால் பகிரப்பட்டது.

அதன் அடிப்படையில் சரவணம்பட்டி பகுதி கிளீன் ஸ்டீட் ஃபுட் ஹப் பகுதிக்கு 150க்கு 126 மதிப்பெண்களுடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை சரவணம்பட்டி நடைபாதை உணவு வணிகா், சிறு குறு உணவு வணிகா்களுக்கு உணவுப் பாதுகாப்பு, தரங்கள் ஆணையத்தின் தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் டாக்டா் தமிழ்ச்செல்வன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துராமலிங்கம், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சண்முகம், கோவிந்தராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com