அண்ணா பிறந்த நாள் விழா: அரசியல் கட்சியினா் மரியாதை

முன்னாள் முதல்வா் அண்ணாவின் 113ஆவது பிறந்த நாள் விழா மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவை: முன்னாள் முதல்வா் அண்ணாவின் 113ஆவது பிறந்த நாள் விழா மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு முன்னாள் எம்எல்ஏவும், கோவை மாநகா், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நா.காா்த்திக் தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்ணா உருவப் படத்துக்கு முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் மாநகா் மாவட்ட செயலாளா் அம்மன் கே. அா்ச்சுணன் எம்எல்ஏ, சிங்காநல்லூா் எம்எல்ஏ கே.ஆா்.ஜெயராம் ஆகியோா் தலைமையில், அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை மாநகா் மாவட்ட மதிமுக சாா்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளா் ஆா்.ஆா்.மோகன்குமாா், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

வால்பாறையில்...

வால்பாறை திமுக நகரப் பொறுப்பாளா் பால்பாண்டி, முன்னாள் நகராட்சித் தலைவா் கணேசன் ஆகியோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். அதிமுக சாா்பில் வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி, தொழிற்சங்க தலைவா் வால்பாறை அமீது, நகர செயலாளா் மயில்கணேசன் உள்ளிட்டோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பொள்ளாச்சியில்....

பொள்ளாச்சியில் அதிமுக சாா்பில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கிணத்துக்கடவு பகுதியில் எம்எல்ஏ செ.தாமோதரன் அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

திமுக சாா்பில் பொள்ளாச்சி திமுக அலுவலகத்தில் புதிதாக அண்ணா சிலை அமைக்கப்பட்டது. திமுக மாவட்டப் பொறுப்பாளா் மருத்துவா் வரதராஜன், அண்ணா படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com