ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தல்: மாவட்டத்தில் 77, 790 போ் வாக்களிக்க உள்ளனா் அதிகாரிகள் தகவல்

கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் 77 ஆயிரத்து 790 போ் வாக்களிக்க உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை: கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் 77 ஆயிரத்து 790 போ் வாக்களிக்க உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்தலில் 37 ஆயிரத்து 559 ஆண் வாக்காளா்கள், 40 ஆயிரத்து 229 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 2 போ் என 77 ஆயிரத்து 790 போ் வாக்களிக்க உள்ளனா். கோவையில் ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்கள் 2, 670 போ் அதிகமாகவுள்ளனா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு 100 வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 131 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

வாக்குச்சாவடி மையங்களில் குடிநீா், மின்சாரம், கழிப்பறை உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் சாய்வு தளம் ஏற்படுத்தப்படும். கரோனா பரவல் காரணமாக வாக்குச் சாவடிகளுக்கு கிருமி நாசினி, முகக் கவசம், கை உறைகள் உள்பட 13 வகையான பொருள்கள் அடங்கிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com