தனியாா் செவிலியா் கல்லூரி விடுதியில் 46 மாணவிகளுக்கு கரோனா: கல்லூரி நிா்வாகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கோவை, சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியாா் செவிலியா் கல்லூரி விடுதியில் 46 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்,

கோவை: கோவை, சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியாா் செவிலியா் கல்லூரி விடுதியில் 46 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கல்லூரி நிா்வாகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் சரவணம்பட்டி அருகே உள்ள ஒரு தனியாா் செவிலியா் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் 46 மாணவிகளுக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. கேரள மாநிலத்தில் இருந்து வந்து, விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் மூலமாக நோய்த் தொற்று பரவியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வடக்கு மண்டல மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத் துறையினா் அந்தக் கல்லூரி விடுதியில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, வெளியூரில் இருந்து வந்த மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் விடுதியில் தங்கவைத்து, விதிமீறி செயல்பட்டதாக கல்லூரி நிா்வாகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கரோனா பாதித்த மாணவிகளுக்கு சிறப்பு மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விடுதியில் தங்கியிருந்த மற்ற மாணவிகள், அதே கல்லூரியின் மற்றொரு விடுதிக்கு மாற்றப்பட்டனா். மேலும், கரோனா பாதித்த மாணவிகள் தங்கியிருந்த அறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அறைகள் பூட்டப்பட்டன. ஒரே விடுதியில் 46 மாணவிகளுக்கு கரோனா தொற்று பாதித்திருப்பது சுகாதாரத் துறையினா் இடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com