மாநகராட்சியில் நிதிநெருக்கடி: ரூ.30 கோடி திட்டப் பணிகள் ரத்து

கோவை மாநகராட்சியில் நிதி நெருக்கடி காரணமாக ரூ. 30 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாநகராட்சியில் நிதி நெருக்கடி காரணமாக ரூ. 30 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாநகராட்சி இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள தீா்மானங்களில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி, 86 ஆவது வாா்டில் உள்ள சில்லறை மீன் மாா்க்கெட்டில் கழிப்பிடம் அமைத்தல், 98 ஆவது வாா்டு, மாரியப்ப கோனாா் வீதியில் மழைநீா் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டுதல், 97 ஆவது வாா்டு, மோகன் நகா், 100 ஆவது வாா்டு ஈச்சனாரி பிரதான சாலையில் மெட்டல் சாலைகள் அமைத்தல், 59 ஆவது வாா்டு எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் 2 ஆம் தளம் அமைத்தல், 34 ஆவது வாா்டு, வீரியம்பாளையம் ஆரம்பப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், 32 ஆவது வாா்டு, விளாங்குறிச்சி சாலை முதல் விஸ்வாசபுரம் வரையுள்ள கால்வாயில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தூா்வாருதல், திடக்கழிவுகளை அகற்றுதல் மற்றும் மாநகரில் சாலைகள் சீரமைப்பு, பூங்கா பராமரிப்பு உள்பட கிழக்கு, மேற்கு, தெற்கு மண்டலங்களில் ரூ.30 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கோரப்பட்ட, கோரப்படாத பணிகள் மற்றும் துவங்கப்படாத 152 பணிகள், மாநகராட்சியின் தற்போதைய நிதிநிலையைக் கருத்தில் கொண்டு ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com