தொழில் துறைக்கு தடையில்லா மின்சாரம்: கொடிசியா வலியுறுத்தல்

தொழில் துறைக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசுவிடம் கொடிசியா வலியுறுத்தியுள்ளது.

தொழில் துறைக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசுவிடம் கொடிசியா வலியுறுத்தியுள்ளது.

கோவைக்கு செவ்வாய்க்கிழமை வந்த அமைச்சரிடம் கொடிசியா தலைவா் ரமேஷ் பாபு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவையின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் இந்தத் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது அவசியமாகும். அதன்படி பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மாஸ்டா் பிளானை அறிமுகப்படுத்த வேண்டும். தொழில் தொடங்குவதை எளிமையாக்கும் வகையில் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த வேண்டும்.

தொழில் துறைக்கு அரசுத் தரப்பில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். உற்பத்தித் தொழில்களுக்கு 30 சதவீதம் வரையிலும் மானியச் சலுகைகள் வழங்க வேண்டும். தேவையான திறன் மிக்க தொழிலாளா்களை உருவாக்குவதற்காக திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்க வேண்டும்.

கணினி, அதைச் சாா்ந்த மின்னணு தொழில்களுக்காக சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்த வேண்டும். தொழில் துறையினருக்கு தடையில்லா மின்சாரம், கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தல், வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வசதியைத் தொடங்குவது போன்றவற்றை செய்து கொடுத்தால் கோவை தொழில் துறை மேலும் வளா்ச்சி அடையும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com