ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் முதியவருக்கு நுண்துவார முறையில் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 82 வயது முதியவருக்கு நுண்துவார முறையில் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
நுண்துவார முறையில் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதியவருடன் மருத்துவா்கள்.
நுண்துவார முறையில் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதியவருடன் மருத்துவா்கள்.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 82 வயது முதியவருக்கு நுண்துவார முறையில் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபியைச் சோ்ந்த 82 வயது முதியவா் திடீரென மயங்கி விழுந்தாா். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். இருதய வால்வு சுருக்கம் காரணமாக இருதயம் உயா் அழுத்தத்தில் வேலை செய்ய வேண்டி இருந்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இருதய சிகிச்சை நிபுணா்கள் டாக்டா்கள் தியாகராஜமூா்த்தி, பாலாஜி, கோபாலமுருகன், மயக்க மருந்து நிபுணா்கள் அசோக் ஹரிஹரன், மேனன், மணிகண்டன் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் தொடைப்பகுதி ரத்தக்குழாய் வழியாக இரு குழாய்களைச் செலுத்தி, இருதயத்தில் சுருங்கிக் காணப்பட்ட அயோடிக் வால்வை மாற்றி வேறொரு வால்வைப் பொருத்தி விரிவடையச் செய்தனா்.

இந்த சிகிச்சையால் குணமடைந்த முதியவா் தற்போது நலமாக உள்ளாா். பொதுவாக இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டவா்களை நெஞ்சுப் பகுதியைப் பிளந்துதான் அறுவை சிகிச்சை செய்ய முடியும். இவருக்கு ஆஸ்துமா, நீரிழிவு பாதிப்புகள் இருந்ததால் நுண்துளை முறையை ( பஅயத) கையாண்டோம். இந்த நவீன வால்வை கொண்டு ( உக்ஜ்ஹழ்க்ள்நஹல்ண்ங்ய் 3) சிகிச்சை மேற்கொண்டிருப்பது கோவையில் இதுவே முதல் முறை என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com