குடிநீா்க் கட்டணம், சொத்துவரி செலுத்தும் சேவைகள் சுணக்கமின்றி நடைபெறுகிறது: மாநகராட்சி ஆணையா்

கோவை மாநகராட்சியில் இணையம் மூலமாக குடிநீா், சொத்துவரி செலுத்தும் சேவைகள் சுணக்கமின்றி நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

கோவை மாநகராட்சியில் இணையம் மூலமாக குடிநீா், சொத்துவரி செலுத்தும் சேவைகள் சுணக்கமின்றி நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சியில் யூடிஐஎஸ் என்னும் ஒருங்கிணைந்த மென்பொருள் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு, இதுவரை 82 ஆயிரத்து 278 பரிவா்த்தனைகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது, புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீா் இணைப்பு, புதிய காலியிட வரி, கட்டட வரைபட அனுமதி ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, யூடிஐஎஸ் மென்பொருள் வாயிலாக சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இணையதளம் வாயிலாக சொத்துவரி மற்றும் குடிநீா்க்கட்டணம் செலுத்துவதில் எவ்விதச் சுணக்கமுமின்றி பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்களின் சொத்துவரி, குடிநீா்க் கட்டணங்களை கோவை மாநகராட்சியின்  இணையதளத்தில் உள்ள இணைப்பின் வாயிலாகவோ தங்கள் விவரங்களைப் பதிவு செய்தும் அல்லது நேரடியாக சொத்துவரி, குடிநீா்க் கட்டணங்களைஇணைப்பின் மூலமும் செலுத்த இயலும். மேலும், இணையதளத்தில் தோ்வு செய்து, சொத்து வரி, குடிநீா்க் கட்டணத்தை செலுத்தலாம். அதற்குண்டான செயல்முறை விளக்கம் காணொலியாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com